Friday, February 25, 2011

எகிப்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் "பேஸ்புக்"


எகிப்தில், பிறந்த குழந்தைக்கு பேஸ்புக் பெய‌ரை சூட்டி அதற்கு பெருமை சேர்த்துள்ளனர் எகிப்து தம்பதியினர். எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, ஹோஸ்னி முபாரக், அதிபராக பதவி வகித்து வந்தார். இவரது ஆட்சியில் ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நாட்டில் நிகழும் நிகழ்ச்சியை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை தடை செய்யும் பொருட்டு, எல்லா தொலை தொடர்பு சேவையையும் எகிப்து அரது தடை செய்தது. இந்நிலையில், பேஸ்புக் மட்டும் அந்த நாட்டு மக்களுக்கு பேருதவி செய்தது. இதனையடுத்து, 18 நாட்கள் கிளர்ச்சிக்குப் பிறகு, ஹோஸ்னி முபாரக்கின் கட்டுப்பாட்டிலிருந்து எகிப்து விடுதலை பெற்றது. இந்த மக்கள் வெற்றிக்கு பேஸ்புக் பெரும் பங்காற்றியது. இந்நிலையில், பேஸ்புக்கை கவுரவிக்கும் வகையில், எகிப்தில் பிறந்த குழந்தைக்கு பேஸ்புக் என்று எகிப்து தம்பதி பெயர் வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment