Thursday, January 27, 2011

என் உயிர் காதலி..

*அடைத்த கதவை
இழுத்து சரிபார்ப்பதுபோல்..
என்னிடம் செல்லமாக
சண்டையிட்டு
உறுதி செய்கிறாய் பூர்ணி
உன் மீதான என் காதலை...







*தாய் தந்தை எனக்கு இருந்தாலும்
பூர்வா..
நீ மட்டும் இல்லையென்றால்
நான் ஒரு அனாதை!

10 பில்லியன் டவுன்லோடுகள் கடந்து 'ஆப்பிள்' சாதனை

சர்வதேச அளவில் ஐ பாட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தங்களது ஆப்பிள் ஆப் ஸ்டோரின் மூலம் 10 பி்ல்லியன் டவுன்லோடுகள் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2008ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன், இன்று சர்வதேச அளவில் சக்கைப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தங்களது ஆப் ஸ்டோர்களின் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புரோகிராம்களும், அதேபோல், 40 ஆயிரத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்களும் வழங்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில், தங்களது ஆப் ஸ்டோர்களின் மூலம் நடந்த டவுன்லோடுகள் 10 பில்லியன் என்ற மைல்கல்லை தொட்டிருப்பது மகிழ்ச்சி‌யளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மற்றும் நோக்கியாவின் ஓவி ஸ்டோர் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டல் விருதை பெற்றார் ரஹ்மான்

உலக பொருளாதார அமைப்பின் சார்பில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் 5 நாள் கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலக பொருளாதார அமைப்பின் சார்பில் கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைத் துறையில் படைத்த சாதனைகளுக்காக மட்டுமின்றி அவரது சமூக சேவையைப் பாராட்டியும் இந்த விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரஷிய ஜனாதிபதி மெட்வதேவ் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருது குறித்து ரஹ்மான் கூறுகையில், "உலகின் மிக உயர்ந்த பெருமை இது. மகிழ்ச்சியாக உள்ளது. மனித நேயம்தான் உலகில் இன்றைக்கு மிக அவசிய தேவை. மனித நேயத்தை வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்," என்றார்.

Thursday, January 6, 2011

கனவு அணியில் கபில், சச்சின், சேவக்

ஐ.சி.சி., ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியில் இந்தியாவின் கபில் தேவ், சச்சின், சேவக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மெல்போர்னில் கடந்த 1971, ஜன. 5ம் தேதி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதிய முதலாவது ஒரு நாள் போட்டி நடந்தது. தற்போது ஒரு நாள் போட்டிகள் துவங்கியதன் 40 ஆண்டுகள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு நாள் அரங்கின் கனவு அணியை தேர்வு செய்ய, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) முடிவு செய்தது. இதற்காக முதலில் 48 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இருந்து சிறந்த 11 வீரர்களை, ஐ.சி.சி., இணையதளம் மூலமாக ரசிகர்கள் தேர்வு செய்தனர். இதில், 97 நாடுகளை சேர்ந்த 6 லட்சத்துக்கும் அதிகமானோர் ஓட்டளித்தனர். நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, 1983ல் இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்று தந்த கபில் தேவ் "ஆல்-ரவுண்டராக' இடம் பெற்றுள்ளார். துவக்க வீரர்களாக சச்சின், சேவக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 48 பேர் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் கும்ளே, ஹர்பஜன், தோனி, கங்குலி ஆகியோர் கனவு அணியில் வாய்ப்பு பெற இயலவில்லை.
கடந்த 2006ல் ஆஸ்திரேலியா(434), தென் ஆப்ரிக்கா(438/9), இடையே நடந்த பரப்பான மோதல், சிறந்த ஒரு நாள் போட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் அரங்கின் ஐ.சி.சி., கனவு அணி:
துவக்க வீரர்கள்: சச்சின், சேவக்(இருவரும் இந்தியா)
மிடில் ஆர்டர்: வெஸ்ட் இண்டீசின் லாரா மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ், பாண்டிங்(ஆஸி.,)
ஆல்-ரவுண்டர்- கபில் தேவ்(இந்தியா)
விக்கெட் கீப்பர்- கில்கிறிஸ்ட்(ஆஸி.,)
சுழற்பந்துவீச்சாளர்: முரளிதரன்(இலங்கை)
வேகப்பந்துவீச்சாளர்கள்: அக்ரம்(பாக்.,), மெக்ராத்(ஆஸி.,)டொனால்டு(தென் ஆப்ரிக்கா).
12வது வீரர்: மைக்கெல் பெவன்(ஆஸி.,)