Friday, December 17, 2010

10, பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை ( 10th, +2 Exam Time table)


பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை : (+2 EXAM TIME TABLE)
2.3.11 மொழி முதல் தாள்
3.3.11 மொழி இரண்டாம் தாள்
7.3.11 ஆங்கிலம் முதல் தாள்
8.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
11.3.11 இயற்பியல், பொருளியல், உளவியல்
14.3.11 வேதியியல், கணக்குப்பதிவியல்
17.3.11 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
18.3.11 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ்
21.3.11 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
23.3.11 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி
25.3.11 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு அட்டவணை : (10th EXAM TIME TABLE)
28.3.11 மொழி முதல் தாள்
29.3.11 மொழி இரண்டாம் தாள்
31.3.11 ஆங்கிலம் முதல் தாள்
1.4.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
5.4.11 கணிதம்
8.4.11 அறிவியல்
11.4.11 சமூக அறிவியல்
மெட்ரிகுலேஷன்
22.3.11 மொழி முதல் தாள்
23.3.11 மொழி இரண்டாம் தாள்
24.3.11 ஆங்கிலம் முதல் தாள்
25.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.3.11 கணிதம் முதல் தாள்
30.3.11 கணிதம் இரண்டாம் தாள்
1.4.11 அறிவியல் முதல் தாள்
5.4.11 அறிவியல் இரண்டாம் தாள்
8.4.11 வரலாறு மற்றும் சிவிக்ஸ்
11.4.11 புவியியல் மற்றும் பொருளியல்

வருகிறது "111111'


அடுத்த ஆண்டு, அதாவது "2011' யை சுருக்கமாக "11'என குறிப்பிட உள்ளனர். முதல் மாதமான ஜனவரி 1ம் தேதியை சுருக்கமாக "1.1.11' என குறிப்பிடுவர். இது மட்டும் இருந்தால் குழப்பம் வராது.
அதே ஜனவரி 11ம் தேதி அன்றும், "11.1.11' என வரும். நவம்பர் மாதமும் இது போன்ற ஒரு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதாவது, 11ம் மாதமான நவம்பர் 1ம் தேதியை, "1.11.11' என குறிப்பிட வேண்டி வரும். அதே நவம்பர் மாதம் 11ம் தேதியை "11.11.11' என குறிப்பிடுவர்.
ஆக, அடுத்த ஆண்டு "1' என்ற எண், இப்படியெல்லாம் பல விதங்களில் நமது "வாழ்க்கையோடு' விளையாட உள்ளது. இந்த தேதிகளை குறிப்பிடும்போது, எண்களுக்கு இடையேயான புள்ளியை சரியாக வைக்காவிட்டாலோ, மாற்றி வைத்து விட்டாலோ, தேதியும் மாதமும் மாறி விடும்.
எனவே தேதி குறிப்பிட்டு "ரசீது' பெறுவோர், கணக்கு எழுதுவோர் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல குழப்பங்களை சந்திக்க வேண்டி வரும்.

Sunday, November 21, 2010

'பணத்தை எண்ணுங்க; வலியை மறந்துடுங்க'


'பணத்தை எண்ணி கொண்டே இருந்தால், என்ன வலி உடலில் இருந்தாலும் போயே போய்விடும்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்காவின், மின்னசோட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சில மாணவர்களை வைத்து ஓர் ஆராய்ச்சி நடத்தினர். ஒரு சிலருக்கு பணக்கட்டுகள் மற்றும் சில்லறைகளை கொடுத்து, எண்ண சொல்லினர். ஒரு சிலருக்கு வெற்றுத்தாள்களை கொடுத்து எண்ண சொல்லினர்.
பணத்தை எண்ணும் போதும், வெற்றுத்தாள்களை எண்ணும் போதும் மாணவர்களிடம் ஏற்பட்ட மாறுபாடுகளை, வேகத்தை, ஆய்வு செய்தனர். எண்ணி முடித்த பின், ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்ட வெந்நீரில், கையை நனைக்கும்படி கேட்டு கொண்டனர்.
அப்போது அவர்கள் எவ்வளவு வலி மற்றும் எவ்வளவு நேரம் வெந்நீரில் கையை வைக்க முடிகிறது என்பதை குறித்து கொண்டனர். ஆய்வின் முடிவில், பணம் எண்ணியவர்களிடம் ஏற்கனவே இருந்த வலி குறைந்துள்ளதும், நீண்ட நேரம் கையை வெந்நீரில் வைக்க முடிகிறது என்பதும் தெரிய வந்தது.

Saturday, November 20, 2010

நான் விரும்பிய பாடல்கள் :ஏ.ஆர்.ரகுமான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய விருப்பப் பாடல்களை வெளியிட்டுள்ளார்.
1. நறுமுகையே நறுமுகையே - இருவர்
2. என்னவளே அடி என்னவளே - காதலன்
3. மார்கழித் திங்கள் அல்லவா - சங்கமம்
4. காதல் காதல் - உதயா
5. வீரபாண்டி கோட்டையிலே - திருடா திருடா

Wednesday, September 1, 2010

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி: விஞ்ஞானி தகவல்

'ஏலியன்ஸ்' என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி;ஆனால் அவர் களை, மனிதர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது' என, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது: பிரபஞ்சத்தில், 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில், பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு. என்னுடைய கணித அறிவின்படி, வேற்று கிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விஷயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு, நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம். தங்கள் கிரகத்திலுள்ள அனைத்து வளங் களையும் பயன்படுத்தி விட்டு, தற்போது வேறு இடத் தில் வசிப்பதாக நான் கருதுகிறேன். அது போன்ற வேற்று கிரகவாசிகள், மற்ற கிரகங் களுக்கு நாடோடிகள் போல நுழைந்து, அவ்வுலகத்தைக் கைப் பற்றவும் தயாராக இருக்கலாம். ஆனால், அவர்கள் இவ்வுலகில் நுழைந்தால், அவர்களுக்கு அது வெற்றியாக அமைய வாய்ப் பில்லை. இவ்வாறு ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்.

Wednesday, August 25, 2010

ஆச்சர்யமான உலக மொழிகள் : ஒரு பார்வை

இந்த உலகில் பல்வேறுபட்ட மொழிகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில அங்கீகாரம் அற்ற நிலையில் உள்ளன. பல அங்கீகாரம் பெற்றுள்ளன. சில நாடுகளில் வழக்கில் உள்ள மொழிகள் ஆச்சர்யங்களை ஏற்படுத்துகின்றன. அவற்றில் சிலமொழிகளையும், அவை பேசப்படும் நாடுகளையும் இங்கே காண்போம்.
* டவுசிரோ (Taushiro ), பெரு
* கெய்சானா( Kaixana ), பிரேசில்
* லெமரிக் (Lemerig ), வடக்கு ஆஸ்திரேலியா
* கெமிகியூவி (Chemehuevi), கலிபோர்னியா
* ஜெரெப் (Njerep ), நைஜீரியா
* தனீமா(Tanema), சாலமோன் தீவுகள்
* லிகி(Liki ), இந்தோனேசியா
* ஆன்கோடா(Ongota), எதியோபியா
* டுமி(Dumi ), நேபால்
* காமிகுரோ(Chamicuro), பெரு

Friday, August 20, 2010

ராணுவம் இல்லாத நாடுகள்

ஒவ்வொறு நாடும் தங்களுடைய ராணுவப்படைகளை பயன்படுத்தி போரிட்டு கொண்டு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ராணுவமே இல்லாத சில நாடுகளும் உள்ளன.
* வாடிகன் நகரம்
* நவுரூ
* லீச்டென்ஸ்டீன்
* மார்ஷல் தீவுகள்
* கிரினாடா
*அன்டோரா
* பாலாவு
* சமோவா
*கோஸ்டாரிகா
* சாலமோன் தீவுகள்

அரிய வகை நோய்கள் : ஒரு பார்வை

உலகில் பல அரிய வகை நோய்கள் மக்களை தாக்குகின்றன. அவற்றில் முதன்மையாக விளங்கும் நோய்களை இங்கு காண்போம்.
* சின்னம்மை ( Smallpox)
* போலியோ (Polio)
* புரொஜீரியா (Progeria)
* பீல்டு நோய் (Fields’ disease)
* பைப்ரோடிஸ்பிளேசியா ( Fibrodysplasia)
* கூரு (Kuru)
* வோன் ஹிப்பில் லின்டாவு (Von Hippel-Lindau )
* மைக்ரோசெபாலி(Microcephaly)
* பாராநியோபிளாஸ்டிக் பெம்பைகஸ்( Paraneoplastic pemphigus)
* மார்கிலோன்ஸ் (Morgellons)

குறிப்பிடத்தக்க மற்றும் வழக்கத்திற்கு மாறான பட்டப்படிப்புகள்

இன்றைய கால கட்டத்தில் உலகளவில் பல்வேறு படிப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு படிப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் சில படிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன.
அவற்றின் பட்டியலை காண்போம்.
* எனிக்மடாலஜி (Enigmatology)
* சிரிப்பு படிப்புகள் (Comedy Studies)
* குளோபல் கவர்னன்ஸ் ( Global Governance)
* அரோமாதெரபி (Aromatherapy)
* பிளாக்ஸ்மித்திங் (Blacksmithing)
* நானோடெக்னாலஜி (Nanotechnology)
* ஹெர்பாலஜி (Herbology)
* ஆர்க்கியாலஜி (Archeology)
* ரேடியாலஜிக் சயின்ஸ் (Radiologic Science)
* டாக்சேசன் ( Taxation)