Sunday, November 21, 2010

'பணத்தை எண்ணுங்க; வலியை மறந்துடுங்க'


'பணத்தை எண்ணி கொண்டே இருந்தால், என்ன வலி உடலில் இருந்தாலும் போயே போய்விடும்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்காவின், மின்னசோட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சில மாணவர்களை வைத்து ஓர் ஆராய்ச்சி நடத்தினர். ஒரு சிலருக்கு பணக்கட்டுகள் மற்றும் சில்லறைகளை கொடுத்து, எண்ண சொல்லினர். ஒரு சிலருக்கு வெற்றுத்தாள்களை கொடுத்து எண்ண சொல்லினர்.
பணத்தை எண்ணும் போதும், வெற்றுத்தாள்களை எண்ணும் போதும் மாணவர்களிடம் ஏற்பட்ட மாறுபாடுகளை, வேகத்தை, ஆய்வு செய்தனர். எண்ணி முடித்த பின், ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்ட வெந்நீரில், கையை நனைக்கும்படி கேட்டு கொண்டனர்.
அப்போது அவர்கள் எவ்வளவு வலி மற்றும் எவ்வளவு நேரம் வெந்நீரில் கையை வைக்க முடிகிறது என்பதை குறித்து கொண்டனர். ஆய்வின் முடிவில், பணம் எண்ணியவர்களிடம் ஏற்கனவே இருந்த வலி குறைந்துள்ளதும், நீண்ட நேரம் கையை வெந்நீரில் வைக்க முடிகிறது என்பதும் தெரிய வந்தது.

Saturday, November 20, 2010

நான் விரும்பிய பாடல்கள் :ஏ.ஆர்.ரகுமான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய விருப்பப் பாடல்களை வெளியிட்டுள்ளார்.
1. நறுமுகையே நறுமுகையே - இருவர்
2. என்னவளே அடி என்னவளே - காதலன்
3. மார்கழித் திங்கள் அல்லவா - சங்கமம்
4. காதல் காதல் - உதயா
5. வீரபாண்டி கோட்டையிலே - திருடா திருடா